Friday, 23 August 2013

Shri Sai Nidharsanam-Swamiji-7th Issue

Shri Sai Nidharsanam - Swamiji' is a quarterly non-commercial Journal dedicated for SAI with special focus on Shri Narasimha Swamiji, the man who dedicated his life for SAI Prachar.  The magazine is an official organ of the Gowrivakkam Sai Baba Temple, Tambaram, Chennai. To download click here Shri-Sai-Nidharsanam-Swamiji-7th-Issue


Thursday, 7 March 2013

SHRI SAINATH KAVACH


The word 'Kavach' means citadel, i.e. Kavach on any deity is aimed to ensure protection from that deity.  The principle behind such praise is believed to be based on the concept of 'Pindanda', which means Pinda (Microcosm) is the replica of Anda (Macrocosm).  Therefore, when you secure for protection of the body of Lord, automatically it infers protection of the entire world.  Normally, the approach to compose 'Kavach' runs hand in hand with the poetic styles of Padhadhikesa Varnana (narrating from toe to head) or Kesadhipadha Varnana (narrating from head to toe), but not necessarily in a systematic manner. 
       Shri Sainath Kavach is a very powerful composition by Shri N.S.Chidambaram praising Shri Sainath Maharaj in Tamil, with utmost devotion.  For the past few decades, Sai Devotees are chanting this Kavach and got the immense blessings of Shri Sainath Maharaj.  We are reproducing it below for the Sai Devotees.  Jai Sairam!
 
ஸ்ரீ சாய்நாதர் கவசம்



இயற்றியவர்: அருளிசைக் கலைஞர், அருளுரை வித்தகர், வித்யா ரத்தினம்.என்.எஸ்.சிதம்பரம்


அருளுரை ஹரிகதா சக்ரவர்த்தி, கீர்த்தன குலசேகர, தருமபுர ஆதீன வித்வான் ஸ்ரீமான் எம்பார் விஜயராகவாச்சாரியார் அவர்கள்


ஜயஸ்ரீ சாயிநாத!



கவசம் என்ற பாமாலை தொன்றுதொட்டு நம்மிடையே இருந்து வருகிறது.  வழிபடும் தேவதைகள் எல்லோருக்கும் கவசங்கள் இதிகாச புராணங்களிலும், மந்த்ர சாஸ்த்ரங்களிலும் காணப்பெறுகின்றன.  ஸ்ரீமத் நாராயண கவசம், லக்ஷ்மீ கவசம், சிவ கவசம், தேவீ கவசம், ஷண்முக கவசம் முதலான பல கவசங்கள் பாராயணம் செய்து இம்மை, மறுமைப் பயன்கள் எல்லாவற்றையும் பெறுகிறோம்.  இதே பத்ததியை அனுசரித்து அருளிசைக் கவிஞர் N.S.சிதம்பரம் அவர்கள் ஸ்ரீ சாயிநாதர் கவசம் இயற்றியிருக்கிறார்கள்.  ஒன்பதே பாட்டுக்களால் அமைந்த இந்த திருக்கவசம் சொற்சுவை, பொருட்சுவைகள் நிறைந்து ஸ்ரீ சாயிநாதர் பக்திக்கு வித்திட்டு விளங்குகிறது.  இதனைப் பாராயணம் செய்து இம்மை, மறுமைகளைப் பெறுவோம்.



முகாம்: சென்னை, குருவாரம்
17-2-72
எம்பார் விஜயராகவாச்சாரி



ஸ்ரீ சாயிநாதர் கவசம்



     நவமணி மாலை போன்று நன்கமைந்துள்ள ஸ்ரீ சாயிநாதர் கவசத்தை நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் அன்பர்கள் ஓதிவரின் எவ்விடத்திலும் எந்த நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் நேராவண்ணம் ஸ்ரீ சாயிபாபா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம் புரிவார் என்பது திண்ணம்.


சீரடி சாயி திருக்கவசம் யான்பாடக்
கார்மேனி ஐங்கரனே காப்பு
--------
திருவளரும் சீரடிவாழ் ஸ்ரீ சாயி
          நாதனவன் சிரசைக் காக்க!
அருள்வளரும் ஸ்ரீசாயி அமலனவன்
          நெற்றியினை அமர்ந்து காக்க!
பொருள்வளரும் ஸ்ரீசாயி புனிதனவன்
          வதனமதைப் பொலிந்து காக்க!
தெருள்வளரும் ஸ்ரீசாயி தேவனவன்
          கண்ணிரண்டும் தினமும் காக்க!

புவியிறைஞ்சும் ஸ்ரீசாயி புருவங்கள்
          இரண்டினையும் புகழ்ந்து காக்க!
செவியிரண்டும் ஸ்ரீசாயி சேவகன்தான்
          எந்நாளும் சேர்ந்து காக்க!
தவமுனிவன் ஸ்ரீசாயி பாபாஎன்
          தலைமயிரைத் தழைந்து காக்க!
நவமணியான் ஸ்ரீசாயி பாபாஎன்
          நாசியினை நயந்து காக்க!

கண்கண்ட ஸ்ரீசாயி தெய்வமவன்
          இருகன்னம் கனிந்து காக்க!
விண்கண்ட ஸ்ரீசாயி விமலனவன்
          கண்டமதை விரைந்து காக்க!
பண்கண்ட ஸ்ரீசாயி பரமனவன்
          தோளிரண்டும் பரிந்து காக்க!
மண்கண்ட ஸ்ரீசாயி மாதவன்என்
          மார்பகத்தை மகிழ்ந்து காக்க!

தூயசுடர் வடிவான சாயிஅண்ணல்
          வலதுகரம் துணிந்து காக்க!
நேயமுறும் ஸ்ரீசாயி நீதனவன்
          இடதுகரம் நிதமும் காக்க!
ஆயமறை முடிவான சாயிபரன்
          மணிவயிற்றை அறிந்து காக்க!
தேயமெலாம் துதிசெய்யும் சாயிவள்ளல்
          இடுப்பதனைத் தெரிந்து காக்க!

குருசாயி பகவனவன் கரவிரல்கள்
          ஈரைந்தும் குழைந்து காக்க!
உருவோங்கும் ஸ்ரீசாயி உத்தமன்என்
          பற்களினை உவந்து காக்க!
கருவோங்கும் ஸ்ரீசாயி பாபாஎன்
          வளர்நாவைக் களித்துக் காக்க!
பெருமானாம் ஸ்ரீசாயி போதனென்றன்
          நெஞ்சமதைப் பெரிதும் காக்க!

கனிவுமிகு ஸ்ரீசாயி கடவுளவன்
          குறியதைஎக் காலும் காக்க!
இனிமைமிகு ஸ்ரீசாயி இறையவன்என்
          வலக்காலை இனிது காக்க!
தனிமைமிகு ஸ்ரீசாயி பதியவன்என்
          இடக்காலைத் தாவிக் காக்க!
பனிஇருள்தீர் ஸ்ரீசாயி பாபாஎன்
          பாதவிரல் பத்தும் காக்க!

இருதொடையும் ஸ்ரீசாயி ஈசனவன்
          எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க!
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீசாயி
          வானவன்தான் சிறந்து காக்க!
தருமதுரை ஸ்ரீசாயி என்வாயும்
          இதழ்இரண்டும் தவழ்ந்து காக்க!
அருநிதியாம் ஸ்ரீசாயி ஆண்டவன்என்
          அங்கமெலாம் அழகாய்க் காக்க!

கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
          ஸ்ரீசாயி கடிதிற் காக்க!
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
          ஸ்ரீசாயி பேணிக் காக்க!
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
          ஸ்ரீசாயி அமைந்து காக்க!
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
          ஸ்ரீசாயி உடனே காக்க!

எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
          ஸ்ரீசாயி என்னைக் காக்க!
பக்தியுடன் பணிபுரியும் வேலையெலாம்
          ஸ்ரீசாயி பாபா காக்க!
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீசாயி
          இராமனவன் முன்னே காக்க!
சித்தியெலாம் தந்தென்னைச் சீரடிசேர்
          ஸ்ரீசாயி சித்தன் காக்க!

கவசம் முற்றும்

ஸ்ரீ சாயிநாதர் திருவடி

சாயி நாதர் திருவடியே
          சம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
          நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
          தீரம் அளிக்கும் திருவடியே
உய்யும் ஞானத் திருவடியே
          உயர்வை யளிக்கும் திருவடியே